புகழ்பெற்ற இயக்குனர், வசனகர்த்தாவாக இருந்த பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலம்!

புகழ்பெற்ற இயக்குனர், வசனகர்த்தாவாக இருந்த பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலம்!


Director erode sowndar dead

 தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த சிம்மராசி, முதல் சீதனம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஈரோடு சவுந்தர். மேலும் அவர் சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம்' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு வசனங்களை எழுதி புகழ்பெற்ற வசனகர்த்தாவாகவும் திகழ்ந்தார். 

மேலும் தான் வசனம் எழுதிய திரைப்படங்களிலும் சிறு  கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஈரோடு சவுந்தர் ரஜினியுடன் லிங்கா, கமலுடன் தசாவதாரம் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு தனது பேரன் கபிலேஷை ஹீரோவாக வைத்து உள்ளேன் அய்யா என்ற படத்தை இயக்கி வந்தார்.

Erode sowndar

 இந்நிலையில், சிறுநீரக பிரச்னை காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் தனது 63 வயதில் நேற்று உயிரிழந்தார். அவர் மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.