அம்மாவுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த செயல்... குவியும் பாராட்டுக்கள்!!
ரஜினிக்கு 30லட்சம் சம்பளம் தர முடியாது என்று கூறிய இயக்குநர்.. ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.?
ரஜினிக்கு 30லட்சம் சம்பளம் தர முடியாது என்று கூறிய இயக்குநர்.. ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.?

1975ம் ஆண்டு கே பாலசந்தர் இயக்கிய "அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரஜினிகாந்த். சம காலத்தில் பிற நடிகர்களை விட மாறுபட்ட நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு, ஸ்டைல் ஆகியவற்றால் தனக்கென்று ஒரு பாணியில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார்.
இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள ரஜினிகாந்த், ஆர்மபத்தில் எதிர்மறை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். இப்போது தனது 170வது திரைப்படத்தில் நடிக்க இருக்கும் ரஜினிகாந்திற்கு 1980 காலக்கட்டம் மிக முக்கியமானதாக இருந்தது.
ஏனெனில் அந்த ஆண்டு மட்டும் தொடர்ந்து அன்புக்கு நான் அடிமை, எல்லாம் உன் கைராசி, முரட்டுக்காளை, பில்லா, பொல்லாதவன் உள்ளிட்ட 8 படங்களில் நடித்திருந்தார். அதேபோல் 1988ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கொடி பறக்குது" திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.
பாரதிராஜா இயக்கினால் தான் நடிப்பேன் என்று ரஜினி கூறியதாகவும், 30லட்சம் சம்பளம் தரமுடியாது என்று கூறியதற்கு, படம் முடிந்த பிறகு வாங்கி கொள்கிறேன் என்று ரஜினி கூறியதாகவும், படம் முடிந்த பின் 20 லட்சத்தைத்தை எடுத்துக்கொண்டு, 10லட்சத்தை திருப்பி கொடுத்ததாகவும் பாரதிராஜா பெருமையாக கூறியுள்ளார்.