மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜெயமுருகன் மரணம்; திரையுலகினர் சோகம்.!

தமிழ் திரையுலகில் மன்சூர் அலிகானை வைத்து சிந்துபாத் படத்தை தயாரித்து வழங்கிய பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன்.
இவர் மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். சிந்துபாத் படத்தைத்தொடர்ந்து, புருஷன் எனக்கு அரசன், தீ இவன், அடடா என்ன அழகு போன்ற படங்களை தயாரித்து வழங்கினார்.
மாரடைப்பால் மரணம்
மேலும், முரளி, அருண் பாண்டியன், ஆனந்த் பாபு நடித்த ரோஜா மலரே படத்தின் இயக்குனராகவும் ஜெயமுருகன் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: சினிமாலதான் காமெடியன், நிஜத்துல பலே வில்லன்.. நடிகையின் பரபரப்பு குற்றசாட்டு.. ஊட்டியில் நடந்தது என்ன?.!
இந்நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்த ஜெயமுருகன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இழப்பு திரையுலகினர், அவரின் நண்பர்கள் & குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இதையும் படிங்க: குடும்பஸ்தன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ண கட்டிக்கிட்டு பாடல் வெளியீடு; லிங்க் உள்ளே.!