பிக்பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி இதை செய்வேன்.! செம கடுப்பில் கொந்தளித்த பிரபல இயக்குனர்.! இதுதான் காரணமா?

பிக்பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி இதை செய்வேன்.! செம கடுப்பில் கொந்தளித்த பிரபல இயக்குனர்.! இதுதான் காரணமா?


director ameer talk about bigboss

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி, ஆகிய  போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். 

அதனை தொடர்ந்து வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் விருந்தினராக வனிதாவும்  மீண்டும் களமிறங்கினார். இதனால் பிக்பாஸ் வீட்டில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கிறது.  இந்நிலையில் கடந்த வாரம் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். குறைந்த வாக்குகளை பெற்று அபிராமி வெளியேறினார். 

ameer

மேலும் சமீபகாலமாக சேரன் கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு ஆதரவாக இருந்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அனைவரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் தற்போது இதுகுறித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் பிக்பாஸ் குறித்து கூறுகையில்,  பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க எனக்கு பிடிக்காது, நான் பார்த்ததும் இல்லை. இயக்குனர்  பிக்பாஸ் வீட்டில் உள்ளார் என்பதற்காக அவர் வரும் சில காட்சிகளை மட்டும் பார்த்தேன்.

ameer

ஆட்டோகிராப் படம் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றும் வெற்றியடைந்ததும், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சேரன் கலந்து கொண்டார் . அப்பொழுது அரங்கத்தில் இருந்த 2000 பேர் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மாறியதாகி செலுத்தினர். அப்பொழுது நானும் மிகவும் பிரமித்துப்போய் அவரை அவரை பார்ப்பேன்.

இன்று பிக்பாஸில் அவர் இருக்கும் நிலையை பார்க்கும்போது கோபமாக உள்ளது. நான் நினைத்தால் பிக்பாஸ் வீடு இருக்கும் ஸ்டுடியோவை அடித்து நொறுக்கி அங்கிருந்து சேரனை அழைத்துக்கொண்டு வந்திருப்பேன். ஆனால் அதை செய்யாமல் அமைதிக்காத்து வருகிறேன். எனக்கு பிடிக்காத நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான்.” என்று ஆவேசமாக கூறியுள்ளார் .