இந்த காரணத்திற்காக தான் தாடி பாலாஜி மனைவியை போலீசார் கைது செய்தார்களா..?
இந்த காரணத்திற்காக தான் தாடி பாலாஜி மனைவியை போலீசார் கைது செய்தார்களா..?

மாதவரம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. நித்யாவிற்கும் அவர் வசிக்கும் வீட்டிற்கு எதிர்திசையில் தங்கியுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாடி பாலாஜியின் மனைவி நித்யா ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நள்ளிரவில் கல் எரிந்துள்ளார். இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணியின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது கல் பட்டு கண்ணாடி உடைந்துள்ளது.
மேலும் தாடி பாலாஜியின் மனைவி நித்தியா கல் எறிந்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவை கைது செய்த போலீசார் எச்சரித்து பின்பு விடுவித்தனர்.