சினிமா

நீ எனக்கு திரும்ப வேணும்! அண்ணனின் திடீர் மரணத்தால் கதறித்துடிக்கும் பிரபல நடிகரின் தம்பி! கண்கலங்க வைக்கும் பதிவு!

Summary:

Dhuruva saarjaa post about his brother dead

கன்னட சினிமாவின் பழம்பெரும் நடிகர்  சக்தி பிரசாத்தின் பேரன் சிரஞ்சீவி சார்ஜா. இவர் பிரபல நடிகர் அர்ஜுனின் மருமகன் ஆவார். சிரஞ்சீவி சார்ஜா 4 வருடங்களாக அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்துவந்தார். பின்னர் அவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வாயுபுத்ரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  ஹீரோவாக அறிமுகமானார்.அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். 

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 10ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை  மேக்னா ராஜை கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் படத்தில் நாயகியாக நடித்தவர். மேலும் பல மலையாளம் மற்றும்  கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு சிரஞ்சீவி சார்ஜா திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு  பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகைய அகால மரணத்தால் குடும்பத்தினர்,  ரசிகர்கள் என பலரும் பெரும் சோகத்தில் உள்ளனர். 

இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜா இறப்பதற்கு முதல்நாள் தனது சகோதரர்களுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படம் போன்றே தற்போதும் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்திருந்தார். இந்நிலையில் அண்ணனுடன் எப்போதும் மிகவும் நெருக்கமாக இருக்கும் அவரது தம்பி துருவா சார்ஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு, நீ திரும்பவும் எனக்கு வேண்டும் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை அண்ணா என வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இது வைரலான நிலையில் பார்ப்போர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.


Advertisement