சினிமா

விஜய், விக்ரம் படத்தில் மிரட்டிய சொர்ணாக்காவை ஞாபகம் இருக்கா ? அவர் என்ன ஆனார் தெரியுமா?

Summary:

Dhool movie sornakka current status

சினிமா துறையை பொறுத்தவரை ஒருசிலர் ஓரிரு படங்களிலையே பிரபலமாகிவிடுவார்கள். அந்த வகையில் தூள் என்ற படத்தில் சொர்ணாக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்தான் இந்த சொர்ணாக்கா.

இவரது உண்மையான பெயர் சகுந்தலா. மஹாராஷ்ட்ராவை பூர்விகமாக கொண்டவர். இவரது தந்தை ஒரு ஆர்மி ஆபிசர். இவருக்கு மொத்தம் 6 சகோதரிகள். சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த இவர் முதல் முறையாக மா பூமி என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வெள்ளி திரையில் அறிமுகமானார்.

அதன்பிறகு பல்வேறு படங்களில் இவர் நடித்திருந்தாலும் தெலுங்கில் வெளியான ஒக்கடு திரைப்படம் இவரை மேலும் பிரபலமாக்கியது. தெலுங்கில் எண்ணற்ற படங்கள் நடித்துள்ள இவர் தரணி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான தூள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் சிவகாசி, மச்ச காளை, மதுரை வீரன், திரு ரங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது 63 வது வயதில் கடந்த 2014 ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிர் இழந்தார்.


Advertisement