"எவ்ளோ தான் அந்த டைரக்டருக்காக..." டாடா இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்.!dhiruv-vikram-going-to-team-up-with-dada-director-for-h

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  மகான் திரைப்படத்தில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார்.

முதல் இரண்டு படங்களிலும் இவரது கதாபாத்திரங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும்  இவரது நடிப்பு திறமையை அனைவரும் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து தனது மூன்றாவது படத்தில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்ற இருந்தார்.

dhruvvikram

கபடி விளையாட்டு போட்டியை மையமாக வைத்து உருவாக இருந்த அந்த திரைப்படம் தாமதமானது. மாரி செல்வராஜ் மாமன்னன் மற்றும் வாழை ஆகிய திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

dhruvvikram

இதனைத் தொடர்ந்து டாடா படத்தை இயக்கிய  கணேஷ் பாபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் துருவ் விக்ரம். மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது வாழைப் படத்தில் பிஸியாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.