சினிமா

கொரோனாவால் சொந்த ஊரில் கைதி பட நடிகருக்கு ஏற்ப்பட்ட நிலையை பாருங்கள்.! வைரலாகும் வீடியோ.

Summary:

Dheena doing all home works

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இடைவிடாத காமெடியால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தீனா. அவரின் டைமிங் காமெடியால் தான் வெள்ளி திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கைதி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் 21 நாட்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் கலக்க போவது யாரு புகழ் தீனாவும் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மாடுகளில் பால் கறந்துள்ளார். அவரின் அந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Veetla velai Pathu Evalo nal achu.. @vijaytelevision

A post shared by Dheena (@dheena_offl) on


Advertisement