சினிமா

குடும்ப குத்துவிளக்காக இருந்த கருப்பன் படநடிகையா இது! இப்படி மாறிட்டாரே! வைரலாகும் செம ஹாட் புகைப்படங்கள்!

Summary:

Dhanya hot photo viral

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த கருப்பன் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். இந்த திரைப்படத்திற்கு முன்பே அவர் பலே வெள்ளையதேவா, பிருந்தாவனம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் அப்படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்காத நிலையில் கருப்பன் திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடையே ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. மேலும் அவர் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப்படத்தில் நடிகை சிநேகாவுடன் இணைந்து விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.மேலும் கருப்பன் திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் புடவையில் குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார். 

இதனை தொடர்ந்து அவர் அவ்வப்போது தனது மாடர்ன் உடையில், மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் தற்போதும் வெள்ளைநிற கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கருப்பன் பட நாயகியா இது என பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 


Advertisement