தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய தனுஷ்...அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா...
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய நடிகருள் ஒருவராக இருந்து வருகிறார். இவருக்கு என்று தமிழ் சினிமா மட்டுமின்றி பிற மொழியிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் பைலிங்குவல் படமான 'வாத்தி' படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லுறு இயக்குகிறார்.மேலும் இந்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் ஷூட்டிங் இன்று முழு வீச்சில் தொடங்கி இருக்கிறது. இப்படத்திற்கான உடை செலவு மட்டும் ஏழு முதல் எட்டு லட்சம் வரை மட்டுமே தயாரிப்பாளருக்கு செலவு வைத்து டோலிவுட் சினிமா துறையினருக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார்.
அதற்கு காரணம் தெலுங்கு சினிமாவில் மற்ற டாப் நடிகர்கள் எல்லாம் உடை மேக்கப் என ஒரு படத்திற்கு ஒரு கோடி வரை செலவு வைப்பார்களாம். அதனால் தனுஷ் அதில் 10% மட்டுமே உடைக்காக செலவு செய்துள்ளார். இந்நிகழ்வு தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது.