நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்து இந்த முன்னணி நடிகர் தான்! தயாரிப்பாளர் எஸ். தாணு ஓபன் டாக்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்து இந்த முன்னணி நடிகர் தான்! தயாரிப்பாளர் எஸ். தாணு ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் அனைவருக்கும் ஞாபகத்திற்கும் வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். இவரின் நடிப்புக்கு ஈடாக யாராலும் நடிக்க முடியாது. அந்த அளவிற்கு இவரின் நடிப்பு அனைத்து மக்களையும் கவரும் வகையில் இருக்கும். 

ஆனால் அவரின் மறைவுக்கு பிறகு யாரும் அவரின் இடத்தை பிடிக்க முடியாத அளவிற்கு இருந்தது. ஆனால் தற்போது நடைப்பெற்ற அசுரன் 100 வது நாள் சிறப்பு விழா நடைப்பெற்றது. அதில் நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் எஸ். தாணு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த விழாவில் பேசிய எஸ். தாணு, சிவாஜி அவர்கள் மட்டும் உயிரோடு இருந்தால் அவரை இந்த விழாவிற்கு அழைத்து வந்திருப்பேன், சிவாஜி அவர்களுக்கு பிறகு எல்லா கதாபாத்திரத்தையும் எடுத்து நடிப்பது நடிகர் தனுஷ் தான் என புகழ்ந்து கூறியுள்ளார். 

மேலும் கேரளா இயக்குனர் ஒருவர் இந்த படத்தில் சிவசாமி கதாபாத்திரத்தை நடிகர் தனுஷை தவிர வேற யாரும் இவ்வளவு அழகாக நடித்திருக்க முடியாது என்று கூறியுள்ளார். 

 

 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo