சினிமா

பிரபல இயக்குனரிடம் சம்பளமே வாங்க மாட்டேன் என அடம்பிடிக்கும் பிரபல நடிகை தன்ஷிகா! நெகிழ்ச்சியில் இயக்குனர்.

Summary:

Dhansika

போராண்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சாய் தன்ஷிகா. அதனை தொடர்ந்து ரஜினி மகளாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர். அதனை அடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவர் நடிப்பதற்கு சம்பளம் வேண்டாம் என கூறி மறுத்துள்ளார்.

அதற்கு காரணம் லாடம் படத்தை இயக்கும் இயக்குனர் ஜனநாதன் தான் நடிகை தன்ஷிகாவை முதன் முதலில் போராண்மை படத்தில் அறிமுகம் செய்துள்ளார். அந்த நன்றியின் அடையாளமாக தற்போது நடிக்கும் படத்தில் சம்பளம் வேண்டாம் என இயக்குனரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் இது குறித்து படக்குழுவினர் கூறும் போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் தன்ஷிகாவை அனுகிய போது உடனே ஒப்பு கொண்டுள்ளார். மேலும் சம்பளம் வேண்டாம் என கூறியதாகவும் கூறியுள்ளனர். 


Advertisement