"சிகரெட் டப்பா எப்படி இருக்கும்னு தெரியாதா?., அப்போ ஏன் வாயில புகையா வருது?" - தனலெட்சுமியின் வீடியோவை வெளியிட்டு பங்கம் செய்த நெட்டிசன்கள்..!!

"சிகரெட் டப்பா எப்படி இருக்கும்னு தெரியாதா?., அப்போ ஏன் வாயில புகையா வருது?" - தனலெட்சுமியின் வீடியோவை வெளியிட்டு பங்கம் செய்த நெட்டிசன்கள்..!!


dhanalakshmi-with-cigerette-video-viral

 

தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கி 4 -வது வாரம் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, இலங்கை செய்திவாசிப்பாளர் ஜனனி, அமுதவாணன், மகேஸ்வரி, கதிரவன், சமூக ஆர்வலர் தனலட்சுமி, நடிகை ஆயிஷா, ரக்ஷிதா, மைனா நந்தினி, மணிகண்டன், மெட்டிஒலி சாந்தி, விக்ரமன், குயின்சி, நிவாஸினி உட்பட 21 பேர் கலந்துகொண்டனர். 

இதில் சமூக ஆர்வலராக இருந்த தனலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் செய்த சில செயல்களால், இந்த சீசனின் ஜூலி, வனிதா அர்ச்சனாவாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறிவந்தனர். இதனால் தனலட்சுமி வாய்ப்பு கிடைத்தால் வீட்டிலிருந்து வெளியேற்றுவோம் என்று பலரும் அரைகூவல் விடுத்துள்ள நிலையில், அவரை தாக்கி பல பதிவுகளும் வரிசையாக வந்த வண்ணம் உள்ளன. 

dhanalakshimi

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஸ்மோக்கிங் ரூம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த அறைக்குள் பல போட்டியாளர்கள் சென்று வருவதை நாமே கண்டிருப்போம். பெண் போட்டியாளர்கள் கூட அவ்வப்போது அங்கு சென்றுவந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனலட்சுமிக்கு சிகரெட் பெட்டி எப்படி இருக்கிறது? என்றுகூட தெரியாது என அவர் தெரிவித்திருந்த நிலையில், தனலட்சுமி மேற்கொண்ட உரையாடலை வைத்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அவர் டிக்டாக்கில் நடிகர் தனுஷின் பாடல் ஒன்றுக்கு வாயில் சிகரெட் வைத்து இழுப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த விடியோவை வைத்து இவருக்கு சிகரெட் என்றால் என்னவே தெரியாது? என்று அவர் எப்படி கூறலாம் என்று கோபத்தில் கொந்தளித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.