சினிமா

தமிழ் நடிகர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார், அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

Dev-Shotting

நடிகர் கார்த்தி நடித்து கொண்டிருக்கும் தேவ் படத்தின் சூட்டிங் குலுமணாலியில் நடைபெற்று வந்தது. தற்பொழுது குழுமலையில் பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் நடிகர் கார்த்திக் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டு தவித்துள்ளார் இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்திக் கூறுகையில் நான் என் கண் முன்னாடியே பேருந்துகள், கார்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்வத்தையும், பாறைகள் உருண்டு ஓடியதையும் பார்த்து ஒரு நிமிஷம் எனக்கு உயிரே போய்விட்டது.  நான் இப்பொழுது பத்திரமாக ஒரு கிராமத்தில் வந்து தங்கிட்டேன். ஆனால் என்னுடன் வந்த பட குழுவினர் மலை உச்சியிலே சிக்கிக்கொண்டனர். அவர்கள் பத்திரமாக உள்ளனரா இப்பொழுது எங்கு தங்கி இருக்கின்றனர் என்று ஏதும் தெரியவில்லை என்று கூறினார்.   

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டபோது 4 முதல் 5 மணி நேரம் காரிலேயே அமர்ந்திருந்தேன்.

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமாகினர். அவர் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்த தேவ் படம் 15 வது படமாகும்.

 

 


Advertisement