சினிமா

அடேங்கப்பா! மௌனராகம் சீரியல் மல்லிகா யார் தெரியுமா? ரசிகர்களை வாய்பிளக்க வைத்த அதிர்ச்சி பின்னணி!

Summary:

details about mounaragam mallikaa

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் மௌனராகம். பெங்காலி சீரியலை மையமாகக்கொண்டு ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதில் சக்தியின் அம்மாவாக கற்பகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சிப்பி ரஞ்சித். 

மௌனராகம் தொடரின் மூலம் தமிழ் சீரியலில் அறிமுகமான இவர், கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். சிப்பி ரஞ்சித் 1995ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தலஸ்ட்னானம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான மலையாள சீரியல்களிலும் நடித்து, பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

சிப்பி ரஞ்சித்க்கான பட முடிவுகள்

இவ்வாறு தொகுப்பாளர், விளம்பர நடிகை, சீரியல் தயாரிப்பாளர், டிவி நிகழ்ச்சி பங்கேற்பாளர் என பன்முகத்திறமை கொண்ட சிப்பி ரஞ்சித் கன்னட படத்திற்கான பிலிம்பேர் விருது, கர்நாடக மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். இவரது கணவர் மலையாள தயாரிப்பாளர் ரஞ்சித்.  இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.  நடிகை சிப்பி ரமேஷ் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்மா என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Advertisement