சினிமா

மாஸ்டர் ரீலிஸ் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை.! ஓகே சொன்ன நடிகர் தனுஷ்.!

Summary:

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி ஆம் என நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில்  கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. இதனால் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியலாம் என கூறப்பட்டது. ரசிகர்கள் இந்த படத்தை பார்பதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் திரையரங்கம் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டு படம் திரையரங்கில்தான் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் லலித்குமார், “மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும். பிரபல ஒடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் பொழுதும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காத்திருக்கிறோம். ரசிகர்கள் வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் லலித் கூறியிருப்பதை மேற்கோள் காட்டி ஆம் என நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார். இதன் மூலம் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "ஜகமே தந்திரம்" திரைப்படமும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பதை தனுஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.


Advertisement