அரசியல் கட்சித்தலைவராகிறார் தனுஷ்.? வெளியான தகவலால் பரபரப்பு.!



Danush next movie update

2002ம் ஆண்டு வெளிவந்த "துள்ளுவதோ இளமை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனுஷ். தொடர்ந்து 50 படங்களில் நடித்திருக்கும் தனுஷ், பிலிம் பேர் விருதுகள், விகடன் விருதுகள், தேசிய விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

Dhanush

இந்நிலையில், தனுஷ் தனது 51ஆவது படத்தை, தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசியல் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்படுகிறது.

மேலும் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Dhanush

ஏற்கனவே, தனுஷ் 'கொடி' படத்தில், அரசியல்வாதியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராக தனுஷ் நடிக்கப்போவது சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.