சினிமா பிக்பாஸ்

முதல் முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் டான்ஸ் மாஸ்டர்! யார் தெரியுமா?

Summary:

Dance master sandi in big boss house

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. சீசன் ஓன்று, இரண்டு என இரண்டு சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் சீசன் மூன்றையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார்.

சீசன் 3 ஆரம்பமாக இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த முறை வீட்டிற்கு செல்லும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஓகே ஓகே பட நடிகை ஜாங்கிரி மதுமிதா மட்டுமே உறுதியாகியுள்ள நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வீட்டிற்குள் யார் யார் செல்கிறார்? இந்த முறை பிக் பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார்? பொறுத்திருந்து பார்ப்போம். வரும் ஞாயிறு மாலை யாரெல்லாம் வீட்டிற்குள் போகிறார் என்பது தெரிந்துவிடும்.


Advertisement