தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
நம்ம குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம் முடிஞ்சாச்சு.! ஜோடியா எவ்ளோ கியூட்டா இருக்காங்க பார்த்தீங்களா!! வைரல் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது பேச்சால், முகபாவனையால் அனைவரையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு புகழுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். பின்னர் புகழின் உச்சிக்கே சென்ற அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. அவர் வெள்ளிதிரையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் zoo keeper என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
அவர் பென்சி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும் இருவருக்கும் விரைவில் திருமணம் எனவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் இன்று புகழ் தனது நீண்டநாள் காதலியான பென்ஸியாவை மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.