நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அடப்பாவமே.. குக் வித் கோமாளி பவித்ராவுக்கு நிகழ்ந்த விபத்து.. ஆபரேஷனால் பொலிவிழந்த முகம்..! உருக்கத்துடன் கூறிய உண்மை..!!

குக் வித் கோமாளி 2-வது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பேராதரவை பெற்ற நடிகை பவித்ரா லட்சுமி. இவர் கடந்த 2022-ல் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் படத்தின் மூலமாக திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றுதந்தது. தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தனது வாழ்வில் நடந்த விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், "எனது சிறுவயதில் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
எனது அம்மாவிற்கு இது பிடிக்காது. அம்மா எப்போதும் என்னை நன்றாக படிக்க சொல்வார். அம்மா படும் கஷ்டத்தை பார்த்து நான் பின் நாட்களில் நன்றாக படித்தேன். சென்னைக்கு வந்த பின்னர் எனக்கு விபத்து ஏற்பட்டது.
முகம், கால்கள் மோசமான காயமடைந்து இருந்தன. முகத்தில் ஆபரேஷன் நடந்து முகத்தை கண்ணாடியில் கூட பார்க்க முடியாத அளவு பொலிவிழந்து இருந்தது. விபத்து குறித்து தொடக்கத்தில் என் அம்மாவிடம் கூறவில்லை" என்ற உருக்கத்துடன் தெரிவித்தார்.