கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
மீண்டும் ஒன்றாக இணைந்த குக் வித் கோமாளி பிரபலங்கள்! அதுவும் எங்கு பார்த்தீர்களா! செம ரகளைதான்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனில் பல பிரபலங்கள் கலந்து கொண்டநிலையில் வனிதா விஜயகுமார் வெற்றியாளரானார். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன்2 ஒளிபரப்பானது. முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த சீசனில் போட்டியாளர்களாக கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், தர்ஷா, ஷகிலா, தீபா, மதுரை முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கோமாளியாக ஷிவாங்கி, மணிமேகலை, புகழ், பாலா, சரத், தங்கதுரை ஆகியோர் செம ரகளைகள் செய்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். இந்த நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதில் கனி வெற்றியாளர் ஆனார்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிகவும் மிஸ் செய்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர். மேலும் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்களான சரத், புகழ், பாலா, சிவாங்கி, தங்கதுரை, ரக்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.