மீண்டும் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள கேங்ஸ்டர்..

மீண்டும் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள கேங்ஸ்டர்..


Controversy news about salman khan

பஞ்சாபி பாடகர் மற்றும் நடிகர் ஜிப்பி கிரேவால். சமீபத்தில் கனடாவின் வான்கூவரில் உள்ள  இவரது வீட்டில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது. இதை தாங்கள் தான் செய்தோம் என்று பழங்குடி இனத்தைச் சேர்ந்த பிஷ்னாய் அமைப்பு தெரிவித்துள்ளது.

Salman

மேலும் அவரது பேஸ்புக் பக்கத்தில் லாரன்ஸ் பிஷ்னாய் என்ற பெயருடைய கணக்கிலிருந்து ஜிப்பி கிரேவாலுக்கு ஒரு மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் "சல்மான் கானை நீங்கள் ஒரு சகோதரர் என்று கருதுகிறீர்கள். உங்கள் சகோதரர் உங்களை பாதுகாக்க வரவேண்டிய நேரம் இது.

இந்த மெசஜ் சல்மானுக்கும் சேர்த்து தான். தாவூத் உங்களைக் காப்பாற்றுவார் என்ற மாயையில் இருக்கவேண்டாம். உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. சித்து மூஸ்வாலாவின் மரணத்திற்கு உங்கள் பதில் கவனிக்கப்பட்டது. நீங்கள் இப்போது எங்கள் ரேடாரில் வந்துவிட்டீர்கள்.

Salman

நீங்கள் எங்கு தப்பிச் சென்றாலும், மரணத்திற்கு விசா தேவையில்லை. அது அழைக்கப்படாமல் வருகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது . இதையடுத்து சல்மான் கானின் பாதுகாப்பு குறித்து போலீசார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக பிஷ்னாய் மக்கள் குருவாக வணங்கும் புல்வாய் இன மானை சல்மான் கொன்றது குறிப்பிடத்தக்கது.