சினிமா

அட.. இவங்கதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தபட்டு இருக்காங்களா! வைரலாகும் ஒன்றுசேர்ந்த போட்டியாளர்களின் புகைப்படம்!!

Summary:

அட.. இவங்கதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தபட்டு இருக்காங்களா! வைரலாகும் போட்டியாளர்களின் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசனும் விரைவில் தொடங்க உள்ளது. அதாவது பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3 மாலை 6 மணிக்கு  தொடங்க உள்ளது. இதுகுறித்த ப்ரோமோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸில் யாரெல்லாம்  போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள போவதாக சில பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ளபோகிறவர்கள் என எதிர்பார்க்கப்படும் சில பிரபலங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த புகைப்படத்தில் மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு, கண்மணி  ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் அந்த புகைப்படம் அவர்கள் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    


Advertisement