பிரபல காமெடி நடிகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை!!

பிரபல காமெடி நடிகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி! விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை!!



comedy-actor-vengal-rav-admitted-in-hospital

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம்வரும் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் நடிகர் வெங்கல் ராவ். இவர் நடித்த காமெடி காட்சிகள் பலவும் மக்களளை பெருமளவில் கவர்ந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

வடிவேலுவுடன் தொடர்ந்து 30 படங்களுக்கு மேல் நடித்த அவருக்கு, வடிவேலு சினிமாவில் ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் படவாய்ப்புகள் எதுவும் பெருமளவில் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க துவங்கிய நிலையில், அவர் சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் வெங்கலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

venkal rav

ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ் சினிமா வாழ்க்கையில் சுமார் 25 வருடமாக ஃபைட் மாஸ்டராக இருந்தவர். பின்னரே நடிகராக களமிறங்கினார். இந்த நிலையில் வெங்கல் ராவ் தற்போது சிறுநீரகக் கோளாறு காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் வைரலான நிலையில் ரசிகர்கள் காமெடி நடிகர் வெங்கல் ராவ் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.