காமெடி நடிகர் சதீஸுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! மணமகள் இவர்தான். அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ.

காமெடி நடிகர் சதீஸுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! மணமகள் இவர்தான். அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ.


Comedy actor sathish engagement photos

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் சதீஷ். தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரேஸி மோகனுக்கான திரைக்கதை எழுத்தாளராக 8 வருடங்களாக பணியாற்றிய இவர் முதல் முறையாக இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் வெளியான பொய் சொல்ல போறோம் என்ற படம் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார்.

அதன்பின்னர் ஜெர்ரி என்ற படத்தின் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார். மதராசபட்டினம் திரைப்படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். நீண்ட காலமாக சினிமாவில் இருக்கும் இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.

Sathish

இந்நிலையில் நடிகர் சதீஷுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மணமகள், மணமகன் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. திருமணம் எப்போது என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

புகைப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் நடிகர் சதீஷுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Sathish

Sathish