காமெடி நடிகர் கிங் காங்கின் மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா? புகைப்படம் இதோ!

காமெடி நடிகர் கிங் காங்கின் மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா? புகைப்படம் இதோ!


Comedy actor king kong family photo

தமிழ் சினிமாவில் ஒருசில எவ்வளவு காலங்கள் கடந்தாலும் மறக்கவே முடியாது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடித்த அதிசய பிறவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் காமெடி நடிகர் கிங் காங்.

கவுண்டமணி, செந்தில் நடித்த பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நம்ம கிங் காங். தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு மொழிப்படங்களில் நடித்துள்ள கிங் காங்க் இதுவரை முந்நூறுக்கு மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

Actor king kong

மார்க்கெட்டுல விலை போகாம இருக்க நா என்ன முத்தின கத்திரிக்காயா என வடிவேலுடன் இவர் இணைந்து செய்த காமெடி இன்றுவரை பிரபலம். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த கிங் காங் தற்போது புதுமுக நடிகர்களின் வருகையால் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து ஒதுங்கியே உள்ளார்.

இவரது குடும்ப வாழ்க்கையை பார்த்தோமேயானல் இவருக்கும் கலா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இதுவரை அதிகம் வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவர்களது புகைப்படம்.

Actor king kong