"எனக்குள் பெண் தன்மை அதிகமாக இருந்தது" கமல்ஹாசனை பற்றி காமெடி நடிகர் அளித்த பேட்டி..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கமலஹாசன். இவர் நடிப்பு திறமையின் மூலம் 'உலக நாயகன்' எனும் பட்டம் பெற்றிருக்கிறார். மேலும், ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வந்தது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தில் கமலஹாசன் நடித்து வருகிறார்.
பிரபல காமெடி நடிகரான காதல் படத்தில் நடித்த சுகுமார் என்பவர் கமலஹாசன் அவருக்கு கூறிய அறிவுரையை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கமலஹாசன் கூறியதாவது "இன்னொரு நடிகரைப் போல் செய்து நடிக்க கூடாது. தனக்கென இருக்கும் திறமையின் மூலமே நடித்து சினிமாவில் முன்னேற வேண்டும்.
மேலும் 'சலங்கை ஒலி' படத்தில் நான் முழுவதும் பரதநாட்டியம் மட்டும் தான் ஆடி இருப்பேன். இதனால் எனக்குள் பெண் தன்மை காணப்பட்டது எனக்கு தெரிந்தது. இவ்வாறு மற்றவர்கள் போல நாம் நடக்க முயல கூடாது" என்று கமலஹாசன் எனக்கு அறிவுரை கூறினார். இவ்வாறாக காதல் சுகுமார் பேட்டி அளித்திருக்கிறார்.