சினிமா

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சிபி கூறியதை பார்த்தீங்களா! முதன்முதலாக வெளியிட்ட அசத்தலான பதிவு!!

Summary:

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சிபி கூறியதை பார்த்தீங்களா! முதன்முதலாக வெளியிட்ட அசத்தலான பதிவு!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் பணப் பெட்டி டாஸ்க் நடைபெற்றது. அதில் முதலில் ரூ 3 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில் பின்னர் அதிகரித்து இறுதியில் 12 லட்சம் வரை பணம் பிக்பாஸால் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதலே மிகவும் நேர்மையாகவும், கடுமையாகவும் விளையாடி வந்த சிபி 12லட்சம் பண பெட்டியை எடுத்துகொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சிபி முதன்முதலாக தனது டுவிட்டர் பக்கத்தில், என்னவொரு அருமையான பயணம் இது. இப்படியொரு வாய்ப்பை எனக்களித்த பிக்பாஸ் குழுவுக்கும், விஜய் டிவிக்கும், டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கும் மிக்க நன்றி.

ஒவ்வொரு வார இறுதியிலும் அன்பை காட்டி எனக்கு ஆதரவளித்த உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் என் மனமார்ந்த நன்றி.பிக்பாஸ் வீட்டில் இருந்த 95 நாட்களும் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாட்களாக மாறிவிட்டன. சக ஹவுஸ்மேட்கள் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் தனித்திறமை கொண்டவர்கள். என்னை பொறுத்தவரை அனைவருமே வின்னர்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒவ்வொரு நாளும் எனக்கு  ஓட்டு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. மேலும் என் மீது அன்பை காட்டி என்னை குறித்த போஸ்ட்கள், டிவிட்டுகள் வெளியிட்டு வந்தவர்களுக்கும் நன்றி. நீங்கள் என்னை சிறந்த போட்டியாளராக, சிறந்த நபராக உருவாக்கியுள்ளீர்கள். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.


Advertisement