மாயோன் வெற்றி! நடிகர் சிபிராஜ் இயக்குனருக்கு கொடுத்த அசத்தலான பரிசு! என்னனு பார்த்தீர்களா??Cibi sathyaraj gift to mayon Director

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், சிபி சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் மாயோன். இத்திரைப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெரடி, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

திரில்லர் படமாக உருவான மாயோன் படத்தை அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கியுள்ளார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வரும் ஜூலை 7ஆம் தேதி மாயோன் படம் தெலுங்கில் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் மாயோன் 2ஆம் பாகம் உருவாக உள்ளதாகவும், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Sathyaraj

இந்த நிலையில் மாயோன் பட வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்பொழுது நடிகர் சிபி படத்தின் இயக்குனர் கிஷோருக்கு தங்கச்செயின் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.