சினிமா

சின்மயி வழக்கில் திடீர் திருப்பம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Summary:

chinmayi cae


பாடகி சின்மயி பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் அவரது கணவரும் குடும்பமும் பக்க பலமாக இருந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியவர் சின்மயி. இவர் சமீபகாலமாக தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களையும் "மீடூ" மூலமாக வெளியிட்டு வருகிறார்.


இந்தநிலையில் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பாடகி சின்மயி தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்றமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீ டூ புகார் கூறிய சின்மயி தன்னை வேண்டுமென்றே பழிவாங்கிவிட்டதாக குற்றம் சாட்டி வந்தார்.

இந்தநிலையில், தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உரிமையியல் நீதிமன்றம். இந்தநிலையில், பெரிய சட்டப்போராட்டம் காத்திருப்பதாக சின்மயி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


Advertisement