பரியேறும் பெருமாள் பட புகழ் நடிகர் காலமானார்.! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்!!

பரியேறும் பெருமாள் பட புகழ் நடிகர் காலமானார்.! தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்!!


Chief minister consolence to dead of koothuk artist nellai thangaraj

கடந்த 2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் ஹீரோவின் தந்தையாக நடித்தவர் தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராசு. நிஜத்திலும் நாட்டுப்புற கலைஞரான இவர் திரைப்படத்திலும் கூத்துக் கலைஞராகவே சிறப்பாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கூத்து கலைஞரான நெல்லை தங்கராசு இன்று அதிகாலை காலமானார். இந்த செய்தியை அறிந்த திரையுலக பிரபலங்கள், நாட்டுப்புற கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நெல்லை தங்கராசு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Nellai thangaraj

அதில் அவர், கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். மக்கள் கலைஞரான தங்கராஜ், பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதில் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நடிப்பால் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர். அன்னாரது மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.