#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
அழியப்போகும் சென்னை திரை ரசிகர்களின் மாபெரும் அடையாளம்; மூடுவிழா காணும் உதயம்.!
தலைநகர் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் உதயம் திரையரங்கம், தாம்பரம் - கோயம்பேடு பிரதான வழித்தடத்தில் அமையப்பெற்றுள்ளது.
உதயம் திரையரங்குக்குக்கு சென்று வரும் மக்களின் கூட்டம் காரணமாக, அங்கு பிரத்தியேகமாக பேருந்து நிறுத்தமும் செயல்படுகிறது. மெட்ரோ வழித்தடம் இருக்கிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 4 திரைகளில் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வரும் உதயம் திரையரங்கில், பல உச்ச நட்சத்திரங்களின் படம் மக்கள் வெள்ளத்துடன் ஓடியது.
இந்நிலையில், உதயம் திரையரங்குக்கு சமீபகாலமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரியவருகிறது. ஓடிடி அறிமுகம், சமீபத்தில் வெளியாகும் படங்களிடையே மக்களுக்கு எழும் அதிருப்தி போன்றவை பார்வையாளர்களின் மனதை பாதிக்கிறது.
இதனால் திரைப்படங்களுக்கு வராமல் மக்கள் வீட்டில் இருந்தவாறு படம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், உதயம் திரையரங்கை மூடி மால் திறக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரையரங்கம் விற்பனை செய்யப்ட்டுள்ளதும் களநிலவரங்களின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.