"நாய்க்கு இருக்கும் மரியாதை கூட மனுஷனுக்கு இல்லையா" த்ரிஷாவின் பதிவால் கோபமடைந்த சென்னைவாசிகள்..



Chennai netizens trolled trisha for her Instagram post

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் த்ரிஷா. இவர் தமிழில் முதன் முதலில் விளம்பர படங்களிலும், மாடல் அழகியாகவும் நடிக்க ஆரம்பித்து ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

trisha

இவ்வாறு தன் திரைபயணத்தை துவங்கிய த்ரிஷா, தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் அதிக அளவு சம்பளம் பெரும் நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில் சமீபத்தில் சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து பலர் உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

trisha

இந்த நிலையில் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் நோய்வாய் பட்டு அவதியுறும் நாய்களுக்கு சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுகிறது. உதவி செய்யுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இப்பதிவை பார்த்த சென்னை வாசிகள் இதுவரை சென்னையில் வெள்ளத்தில் கஷ்டப்படும் மக்களுக்காக ஒரு பதிவு கூட நீங்கள் போடவில்லை. மேலும் உங்களிடம் இல்லாத பணமா இதையும் மக்களிடம் தான் கேட்பீர்களா என்று திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.