செக்க சிவந்த வானம் இரண்டாம் நாள் வசூல் நிலவரம்...!

செக்க சிவந்த வானம் இரண்டாம் நாள் வசூல் நிலவரம்...!


chekka-sivantha-vaanam-therikka-vitta-2m-naal-vasool

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் அர்விந்த்சாமி, ஜோதிகா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து தற்சமயம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். தற்சமயம் இந்த படத்தை பற்றி பல நல்ல விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், சர்சைக்குரிய விமர்சனங்களும் வெளிவந்துகொண்டிருக்கிறது. 

பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை பார்த்ததோடு மட்டுமல்லாமல், ட்வீட்டர் பக்கங்களில் படம் குறித்த விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் வசூலிலும் கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் சென்னையில் இந்த படம் ரூ.89 லட்சம் வசூல் செய்துள்ளது. அதனையடுத்து இரண்டாம் நாள் ரூ.80 லட்சம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.