ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
மான நஷ்ட வழக்கு.! அதிரடியாக களமிறங்கிய மன்சூர் அலிகான்.!
நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், நடிகை குஷ்பூ, திரிஷா, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் மன்சூர் அலிகான் லியோ திரைப்படத்தில் பெட்ரூம் காட்சிகள் இல்லாமல் போய்விட்டது. ரோஜா, குஷ்பூ உள்ளிட்டோரை பலவந்தப்படுத்தும் காட்சியில் நடித்ததை போல த்ரிஷாவுடன் நடிக்க இயலவில்லை என்று இரட்டை அர்த்தத்தோடு பேசியிருந்தார்.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடிக்க தொடங்கியது. பின்னர் நடிகை திரிஷா மன்சூர் அலிகான் என்னைப் பற்றி பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் நான் பார்த்தேன். அதில் பாலியல், பெண் வெறுப்பு மற்றும் மோசமான ரசனை ஆகியவற்றை நான் கண்டேன். அவருடன் இனி ஒரு காலமும் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குனர்கள், சிரஞ்சீவி, குஷ்பூ போன்ற பல நடிகர் ,நடிகைகள் உள்ளிட்டோர் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். இந்த சூழ்நிலையில் தான் நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவுமில்லை மன்னிப்பு கேட்கவுமில்லை.
இந்த விவகாரம் குறித்து சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையம் புகார் வழங்கியதை தொடர்ந்து, மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. இதற்காக காவல் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான் அதன் பிறகு த்ரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
இதற்கு நடுவே த்ரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்டோர் மீது மான நஷ்ட வழக்கு போடப் போவதாக மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், நவம்பர் 27ஆம் தேதியான நாளைய தினம் மான நஷ்டம் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர போவதாக கூறியிருக்கிறார்.