BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
செக்க சிவந்த வானம் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு இருக்கலாம் என எதிர்பார்ப்பு...!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, அரவிந் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா எராப்பா என மிக பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த படம் சென்னையில் பல இடங்களில் அதிகாலை காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி இருக்கிறது. மேலும் ஆன்லைனில் தமிழகம் முழுவதும் இப்படத்திற்கு முன்பதிவு நன்றாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் வசூல் முதல் நாள் முடிவில் வசூலில் ரூ 8 கோடி வரை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.