பிக்பாஸ் சீசன் மூன்றிற்கு அதிரடி தடை? உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுதாக்கல்!

பிக்பாஸ் சீசன் மூன்றிற்கு அதிரடி தடை? உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுதாக்கல்!


Case filed against to bigg boss season three tamil

பிக்பாஸ் முதல் இரண்டு சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, பிக்பாஸ் மூன்றாவது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்கவுள்ளது. சீசன் ஓன்று மற்றும் இரண்டை தொடர்ந்து சீசன் மூன்றையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.

சீசன் மூன்றில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்களின் முழு விவரம் வெளியாகவிட்டாலும் ஒரு சிலரின் பெயர் மட்டும் உறுதியாகியுள்ளது. போட்டி தொடங்கும் நாளை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கும் நிலையில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நிகழ்ச்சிக்கு தடை கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

bigg boss tamil

கவர்ச்சி உடை, இரட்டை வசனங்கள் மூலம் பார்வையாளர்களை கெடுக்கும் விதமாக இருப்பதால். நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக்கூடாது எனவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.

வழக்கு விசாரணை விரைவில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இன்றும் விஜய் டிவியில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது.