இந்தியா

கனமழை, பெரும் வெள்ளம்! இந்த திருமண ஜோடியோட நிலையை பார்த்தீர்களா! ஷாக் சம்பவம்!!

Summary:

கனமழை, பெரும் வெள்ளம்! இந்த திருமண ஜோடியோட நிலையை பார்த்தீர்களா! ஷாக் சம்பவம்!!

கேரளாவில் கடுமையான கனமழை பெய்து வரும் நிலையில் மணமக்கள் இருவரும் அண்டாவில் மிதந்து சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாகி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இத்தகைய பாதிப்புகளால் 22க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. கனமழையின் காரணமாக ஏராளமான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் போக்குவரத்தும் பெருமளவில் துண்டிக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில் செங்கனூர் மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்களாக இருக்கும் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மேலும் தளவாடி என்ற இடத்தில் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்நிலையில் தற்போது கடுமையான மழை பெய்ததால் வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதிக்கு யாராலும் செல்ல முடியவில்லை. இந்நிலையில் எப்படியாவது திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்பதற்காக 
சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய அண்டாவில் மணமக்கள் உட்கார்ந்து நீரில் மிதந்தபடி திருமண மண்டபத்திற்கு செய்துள்ளனர். பின்னர் இருவருக்கும் அங்கு எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement