சினிமா

காரை ஓரம்கட்டிவிட்டு, ஆட்டோ ஓட்டிவரும் பிரபல இளம்நடிகை!! காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!! புகைப்படம் இதோ..

Summary:

bollywood heroine driving auto

பாலிவுட்டில் சின்னத்திரை நடிகையாகவும், ரேடியோ ஜாக்கியாகவும் கலக்கி வருபவர் யஷாஸ்ரீ மஸுர்க்கர். இவர் நடிகர், நடிகைகள் அனைவரும் விதவிதமாக கார்களை வாங்கி பயன்படுத்தும் நிலையில் வித்தியாசமாக ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டுள்ளார்.

 மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் ஆட்டோ ஓட்ட எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் விடியசமாக இருக்கட்டுமே என கார் ஓட்ட துவங்கினேன். பின்னர் அது மிகவும் வசதியாகி விட்டது. எனக்கு கார் சரியாக ஓட்ட தெரியாது இந்நிலையில் கார் என்னிடம் இருந்தபோது காரை ஓட்ட ஓட்டுநர் தேவைப்பட்டனர். மேலும் அவருக்கு சம்பளமும் கொடுக்க வேண்டும். 

ஆனால் ஆட்டோவில் செலவு ரொம்ப குறைவு. அத்துடன் நானே ஈசியாக ஓட்டிக் கொள்ள முடியும். எனது எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நானே ஆட்டோ ஓட்டிசெல்கிறேன். மேலும் இந்த ஆட்டோவை டென்மார்க் நண்பர் ஒருவர் இந்தியாவை சுற்றி பார்க்க வந்தபோது சுற்றி பார்ப்பதற்காக வாங்கினார். பின்னர்அவர் மீண்டும்  நாடு திரும்பிய போது எனக்கு இந்த ஆட்டோவை கொடுத்து சென்றுவிட்டார் என கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில் ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement