கடந்த காலத்தை நினைத்து கதறி அழுத சீதா ராமம் பட நடிகை .!! தீயாய் பரவிய புகைப்படம்... ரசிகர்கள் உருக்கம்.!?



Bollywood actress mirunal takkoor posted teary eyes photos

பாலிவுட் நடிகையான மிருணால் தாக்கூர் முதன் முதலாக 2018ஆம் வருடம் வெளியான 'லவ் சோனியா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் 2019ஆம் ஆண்டு சூப்பர் 30, பாட்லா ஹவுஸ் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகையாக வலம் வந்தார்.

bollywood

இதனை தொடர்ந்து, தமாகா, கோஸ்ட் ஸ்டோரிஸ், தூபான் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பேசபட்டாலும் இந்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியையே தழுவியது. இதனால் விளம்பர படங்களில் நடித்து கொண்டிருந்த மிருணால் தாக்கூர், திரைப்படங்களில் நடிப்பதற்கு சிறிது காலம் ப்ரேக் எடுத்துக்கொண்டார்.

இதுபோன்ற நிலையில், டோலிவுட் பக்கம் வந்த மிருணால் தாக்கூருக்கு 'சீதா ராமம்' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாகவும், மிருணால் தாக்கூர் கதாநாயகியாகவும்  ராஷ்மிகா மந்தானா துணை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மிருணால் தாக்கூருக்கு தெலுங்கில் பெயர் பெற்று தந்தது.

bollywood

இதன்படி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மிருணால் தாக்கூர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வரும் மிருணால் சமீபத்தில் அழுது கொண்டிருப்பதை போல புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். ஏன் அழுகிறீர்கள் என்று கேட்ட ரசிகர்களுக்கு கடந்து போன கஷ்ட காலங்களில் எடுத்த புகைப்படம் இது. இப்போது மகிழ்ச்சியுடனே இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.