இந்த கியூட் குட்டி குழந்தை எந்த பிரபல நடிகை தெரியுமா.? இணையத்தில் வேகமாக பரவும்புகைப்படம்.!?Bollywood actress deepika padukone chubby childhood photos viral at Instagram

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தீபிகா படுகோனே. இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த தீபிகா படுகோனே, தனக்கென தனி இடத்தை பாலிவுட் திரைத்துறையில் நிலைநாட்டி இருக்கிறார்.

deepika

மேலும் தமிழில் முதன் முதலில் 2000 ஆம் ஆண்டு வெளியான 'சினேகிதியே' திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு நீண்ட வருடங்களாக தமிழில் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தால் தீபிகா படுகோனே, 2014 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக தீபிகா படுகோன் இருந்து வருகிறார். மேலும் இவர் ஹை பட்ஜெட் திரைப்படங்களின் மட்டுமே தற்போது நடித்து வருகிறார். குறிப்பாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தில் தீபிகா படுகோனே சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் இப்படம் 1150 கோடி வசூலித்தது.

deepika

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தீபிகா படுகோன் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது இணையத்தில் இவரது சிறுவயது புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றன.