சினிமா

சியான் 60 .. விக்ரமுக்கு வில்லனாகும் தேசிய விருது பெற்ற நடிகர்! செம ஹேப்பியான ரசிகர்கள்!!

Summary:

 தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இ

 தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து ஒன்றாக நடிக்கும் திரைப்படம் சியான் 60. மேலும் இத்திரைப்படத்தில் வாணி போஜன் மற்றும் நடிகை சிம்ரன் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர் இந்த திரைப்படத்தை கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 

 இப்படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் எழுந்த சில பிரச்சினைகள் காரணமாக அவர் அப்படத்திலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து சியான் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் சியான் 60  படத்தில் நடிக்க, தேசிய விருது பெற்ற நடிகர்  பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாபி சிம்ஹா இதற்கு முன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


Advertisement