திடீரென சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இந்தியன் படம்.! ஏன்? என்ன காரணம் தெரியுமா??

திடீரென சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இந்தியன் படம்.! ஏன்? என்ன காரணம் தெரியுமா??


blue-shirt-maran-anti-indian-movie-banned-in-singapore

முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபல இயக்குனர்களின் படங்கள் என்றெல்லாம் பாராமல் திரைப்படங்களை விமர்சனம் செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இதனால் அவர் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். மேலும் பல திரைப் பிரபலங்களின் கோபத்திற்கும் உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ஆன்டி இந்தியன்.  Moon பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள இப்படம் மதம் சார்ந்த பிரச்சினைகளையும், அரசியலையும்  மையப்படுத்தி நையாண்டி பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. ஆன்டி இந்தியன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்தப் படத்தை சிங்கப்பூரில்  வெளியிட அனுமதி மறுக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆண்டி இந்தியன் படத்திற்கு சிங்கப்பூரில் தடை.  சிங்கப்பூரில் ஆண்டி இந்தியனை திரையிட முடிவு செய்திருந்தோம். ஆனால் படம் பார்த்த Examine கமிட்டி மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்தில் இருப்பதால் சென்சார் வழங்க மறுத்து விட்டது.

அதனால் நாங்கள் மறு தணிக்கைக்கு மேல்முறையீடு செய்துள்ளோம். நாளையோ அல்லது நாளை மறுதினமோ மறு தணிக்கை செய்யப்பட்டு படம் திரைக்கு வரும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.