பிந்து மாதவி வெளியிட்ட புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்! இதான் காரணமா?bindhu-madhavi-looks-like-silk-smitha-photo-goes-viral

கழுகு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. அதனை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலமாகவில்லை. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரெங்கா படத்தில் நடித்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பிந்து மாதவி சற்று பிரபலமானார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் பிந்து மாதவி. பின்னர் விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா படம் மூலம் மேலும் பிரபலமானார்.

Bindhu madhavi

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி பிந்து மாதவிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தற்போது ஒருசில படங்களில் நடித்துவருகிறார் பிந்து மாதவி.

இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஓன்று செம வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு சிலுக்கு சுமிதா போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.