சினிமா விளையாட்டு

நேற்றைய இந்தியா ஆட்டத்தை பார்க்க வந்த பிரபல இளம் தமிழ் நடிகைகள்! யார் தெரியுமா?

Summary:

Bindhu madhavi and varalakshmi sarathkumar went to india vs bangaladesh match

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 40 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அடுத்த இரண்டு இடத்திற்கான கடும் போட்டி நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நிலவுகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் விளையாடிய நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நேற்றைய போட்டியின் சிறந்த வீரராக ரோஹித் சர்மா தேர்வுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்தியா விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் இங்கிலாந்து சென்று வருகின்றன்னார். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை பார்க்க நடிகை சிவகார்த்திகேயனும், இசை அமைப்பாளர் அனிருத்தும் சென்றிருந்தன்னார்.

அதேபோல் நேற்றைய இந்தியா - பங்களாதேஸ் ஆட்டத்தை பார்க்க இளம் நடிகைகள் வரலக்ஷ்மி சரத்குமாரும், பிந்து மாதவியும் சென்றிருந்தனர். மேலும், உலகக்கோப்பையுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வரலஷ்மி சரத்குமார். 


Advertisement