விஜய் ரசிகர்கள் மாஸ் காட்ட அருமையான வாய்ப்பு! AGS நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

விஜய் ரசிகர்கள் மாஸ் காட்ட அருமையான வாய்ப்பு! AGS நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு


Bigilrainbow filckchallege for bigil vijay fans

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பிகில். மூன்றாவது முறையாக அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். 

தீபாவளியை வெறித்தனமான பிகில் சரவெடியுடன் கொண்டாட காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் புதிய போட்டி ஒன்றை வைத்துள்ளது. #BigilrainbowflickChallenge என்ற ஹாஸ் டேக்கில் ஏஜிஎஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போட்டியை அறிவித்துள்ளது. 


பிகில் படத்தில் விஜய் கால்பந்தினை காலால் தட்டி தூக்கிவிடுவது போல் ரசிகர்கள் செய்து வீடியோ வெளியிட வேண்டும் என்பது தான் இந்த போட்டி. இதனை செய்து விஜய் ரசிகர்கள் மாஸ் காட்டுங்க பாப்போம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


இதற்கு பதிலளித்துள்ள பல விஜய் ரசிகர்கள் இதெல்லாம் எங்களுக்கு வராது அக்டோபர் 25 ஆம் தேதி எங்கள் ஆட்டம் வெறித்தனமா இருக்கும் என பதிவிட்டுள்ளனர். ஆனால் ஒருசிலர் மட்டும் துணிச்சலாக களமிறங்கி காலபந்தை காலால் தூக்கிவிடும் வீடயோக்களை பதிவு செய்து வருகின்றனர்.