விஜய்க்கு கோவில் கட்டி கும்பிடுவோம்! பிகில் படத்தில் பணியாற்றியவர்களின் உருக்கமான பதிவு!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பெண்களின் கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இதில் நடிகர் விஜய் கால் பந்து விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் டிரைலரும் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தளபதி விஜயை பற்றி பிகில் படத்தில் பணியாற்றிய சண்டை கலைஞர்கள் இவ்வாறு பேசியுள்ளனர். அதாவது நடிகர் விஜய் அவர்கள் தங்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.அதாவது 800க்கும் மேற்பட்டவர்களுக்கு பெப்சி கார்டில் சேருவதற்கு மிகவும் உதவியதாக கூறியுள்ளனர்.
தற்போது அந்த கார்டின் நம்பருக்கு வெயிட் செய்து கொண்டிருப்பதாகும் கூறியுள்ளனர். மேலும் அந்த நம்பர் கிடைத்துவிட்டால் விஜய்க்கு கோவில் கட்டி கும்பிடுவோம் எனவும் கூறியுள்ளனர். இந்நிகழ்வு விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.