சினிமா

பிகில் படத்திற்காக நடிகை வரலஷ்மி செய்துள்ள நெகிழ்ச்சி காரியம்! குவியும் வாழ்த்துக்கள்.

Summary:

Bigil special show for save sakthi children

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளம் வருகிறார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். சிம்புக்கு ஜோடியாக போடா போடி படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் இன்று தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி ஒரு தீவிர விஜய் ரசிகை என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. தற்போது தளபதியின் பிகில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் தளபதி என்ற வாக்கியம் உள்ள டி ஷார்ட் அணிந்து முதல் நாளே பிகில் படம் பார்க்க சென்றிருந்தார் வரலக்ஷ்மி.

இதுஒருபுரம் இருக்க, ஆதரவற்ற குழந்தைகளுக்காக இவர் நடத்திவரும் சேவ் சக்தி என்ற அமைப்பில் உள்ள குழந்தைகளுக்கு பிகில் படம் பார்க்க சிறப்பு காட்சிகளை ஏற்பட்டு செய்துள்ளார் வரலக்ஷ்மி. அதன்படி, பிரபல திரையரங்கம் ஒன்றில் அந்த குழந்தைகளுக்கு பிகில் படம் திரையிடப்பட்டுள்ளது.


Advertisement