சினிமா

பிகில் ரிலீஸ் தேதி குறித்து வெளியான புதிய ட்வீட்! சந்தோசத்தில் தளபதி ரசிகர்கள்!

Summary:

Bigil release date

தெறி, மெர்சலை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ - விஜய் கூட்டணியில் இணைந்துள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் விஜய் கால்பந்து விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பல முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஏ. ஜி. எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


இந்நிலையில் தற்போது வந்த புதிய தகவல் படி படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பிகில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று மாலை சரியாக 6 மணிக்கு வெளியாகும் என ட்வீட் செய்துள்ளார்.


Advertisement